திமுக சிறப்பாக ஆட்சி செய்கிறது - நடிகர் எஸ்.வி.சேகர் புகழாரம்


திமுக சிறப்பாக ஆட்சி செய்கிறது - நடிகர் எஸ்.வி.சேகர் புகழாரம்
x
தினத்தந்தி 21 July 2021 10:06 AM GMT (Updated: 2021-07-21T15:36:40+05:30)

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கொரோனா தொற்றுநோய் காலத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

சென்னை,

சென்னையில் உள்ள நடிகர் சிவாஜி கணேசனின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் நடிகர் எஸ்.வி.சேகர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

திமுக சிறப்பான முறையில் ஆட்சி செய்து வருகிறது. எந்த விமர்சனத்தையும் 100 நாட்கள் வரை வைக்க வேண்டாம் என்று நாங்கள் எல்லாரும் இருக்கிறோம். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கொரோனா தொற்றுநோய் காலத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். 

இதுபோன்று சமயத்தில் மக்களை காப்பாற்றுவதில் மட்டும் தான் முழு கவனத்தை செலுத்த முடியும். எல்லா துறைகளிலும் 100% கவனத்தை செலுத்த முடியாது. ஒரு சமயத்தில், ஒரு வேலை மட்டும் தான் பார்க்க முடியும், அது யாராக இருந்தாலும் சரி. 

அதையும் காலையில் எழுந்தவுடனேயே விமர்சித்து கொண்டியிருந்தால் வெற்று அரசியலாக தான் இருக்கும் .ஒரு உன்னத நோக்கத்துடன் செயல்படும் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசை எப்படி விமர்சனம் செய்ய முடியும்.  தேவையில்லாமல் விமர்சனம் செய்வது வெற்று அரசியல்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story