மாநில செய்திகள்

தமிழகத்தில் பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு விண்ணப்ப பதிவு தொடங்கியது + "||" + Application registration for Plus 2 class sub-examination has started in Tamil Nadu

தமிழகத்தில் பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு விண்ணப்ப பதிவு தொடங்கியது

தமிழகத்தில் பிளஸ் 2  துணைத்தேர்வுக்கு விண்ணப்ப பதிவு தொடங்கியது
பிளஸ்-2 பொதுத்தேர்வு கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டு அவர்களுக்கான மதிப்பெண் வழங்கப்பட்டது.
சென்னை,

பிளஸ்-2 பொதுத்தேர்வு கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டு அவர்களுக்கான மதிப்பெண் வழங்கப்பட்டது. இந்த மதிப்பெண் திருப்தி இல்லை என்று கருதுகிறவர்களுக்கும், அதேபோல் பள்ளி அளவில் தேர்வு எழுதாத தனித்தேர்வர்களுக்கும் ஆகஸ்டு மாதம் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்ப பதிவு இன்று தொடங்கியுள்ளது.

முன்னதாக, இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் உஷாராணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

2020-21-ம் கல்வியாண்டில் பிளஸ்-2 படித்த பள்ளி மாணவர்களுக்கு கடந்த 19-ந்தேதி அன்று வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளில் பெற்ற மதிப்பெண் குறைவாக உள்ளதாக கருதும் மாணவர்கள், இன்று முதல் 27-ந்தேதி வரையிலான நாட்களில் (ஞாயிற்றுக்கிழமை தவிர) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிக்குள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத் துறை சேவை மையங்கள் வாயிலாக பிளஸ்-2 துணைத்தேர்வு எழுத விண்ணப்பிக்க வேண்டும்.

அவ்வாறு விண்ணப்பிக்கும்போது மாணவர்கள் கட்டாயம் தங்களுக்குரிய அனைத்து பாட தேர்வுகளையும் எழுதுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும். தேர்வர்கள் குறிப்பிட்ட பாட தேர்வுகளை மட்டும் எழுதுவதற்கு விண்ணப்பிக்க இயலாது. மேலும் தற்போது எழுத உள்ள தேர்வில் பெறப்படும் மதிப்பெண்கள் இறுதியானது.

மே 2021 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், 2021 மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வினை எழுத தற்போது மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை.

23.07.2021 முதல் 27.07.2021 வரையிலான தேதிகளில் விண்ணப்பிக்கத் தவறும் தேர்வர்கள், சிறப்பு அனுமதித் (தக்கல்) திட்டத்தில் 28.07.2021 அன்று ஆன்-லைனில் சேவைமையங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். (சிறப்பு அனுமதிக் கட்டணம் - ரூ.1000/-)

அரசுத் தேர்வுத் துறை சேவை மையங்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கான அறிவுரைகள்
கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத் துறை சேவை மையங்களின் விவரங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்யும் தனித்தேர்வர்களுக்கான தகுதி மற்றும் அறிவுரைகள் ஆகியவற்றை http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் அறியது கொள்ளலாம்.

மேலும், இவ்விவரங்களை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்களிலும் அறியது கொள்ளலாம்.


தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் 1,700-ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,693 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. தமிழகத்தில் சற்று அதிகரித்த கொரோனா பாதிப்பு: புதிதாக 1,591 பேருக்கு தொற்று
தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,580-இல் இருந்து 1,591 ஆக அதிகரித்துள்ளது.
3. தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்களில் தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்
தமிழகம் முழுவதும் இன்று சிறப்பு முகாம்கள் மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது.
4. தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
5. தமிழகத்தின் புதிய கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்து
தமிழகத்தின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்ட ஆர்.என்.ரவிக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.