முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வங்கி லாக்கர்களை சோதனை செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை முடிவு

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவியின் வங்கி லாக்கர்களை சோதனை செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை முடிவு செய்துள்ளது.
சென்னை,
அ.தி.மு.க. முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. சென்னை மற்றும் கரூரில் உள்ள அவரது வீடுகள், அலுவலகங்கள் என 26 இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் எம்.ஆர் விஜயபாஸ்கரின் வங்கி லாக்கர்களை சோதனையிட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. அவர் பெயரிலும் அவரது மனைவி பெயரிலும் எத்தனை லாக்கர்கள் உள்ளது என்பதை கண்டறிந்து சோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பி, நேரில் அழைத்து விசாரணை நடத்தவும் லஞ்ச ஒழிப்புத்துறை முடிவு செய்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
Related Tags :
Next Story