மாநில செய்திகள்

பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான துணை தேர்வு அட்டவணை வெளியீடு + "||" + Release of SubExamination Schedule for Plus 2 Class Students

பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான துணை தேர்வு அட்டவணை வெளியீடு

பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான துணை தேர்வு அட்டவணை வெளியீடு
பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான துணை தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது.

சென்னை,

தமிழகத்தில், பிளஸ் 2 வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான சூழலில், துணை தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கான தேர்வு காலஅட்டவணை பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

இதன்படி பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான துணை தேர்வுகள் வருகிற ஆகஸ்டு 6ந்தேதி தொடங்கி 19ந்தேதி வரை நடக்கிறது. தேர்வுகள் வழக்கம் போல காலை 10 மணிக்கு தொடங்கும். விடைத்தாளில் குறிப்புகள் எழுத 5 நிமிடம், கேள்வித்தாள் படித்து பார்க்க 10 நிமிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மதியம் 1.15 மணிக்கு தேர்வு முடிவடையும்.