மேலும் 126 பேருக்கு கொரோனா பாதிப்பு


மேலும் 126 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 24 July 2021 6:58 PM GMT (Updated: 2021-07-25T00:28:47+05:30)

புதுச்சேரியில் மேலும் 126 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரியில் மேலும் 126 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா பரிசோதனை 
புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்து 54 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 126 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 227 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது ஆஸ்பத்திரிகளில் 163 பேர், வீடுகளில் 759 பேர் என 922 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 121 பேர் குணமடைந்தனர். மேலும் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 73 வயது முதியவர் பலியானார்.
3 குழந்தைகள்
புதுவையில் உயிரிழப்பு 1.49 சதவீதமாகவும், குணமடைவது 97.75 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முன்தினம் சுகாதார பணியாளர்கள் 16 பேரும், முன்கள பணியாளர் ஒருவரும், பொதுமக்கள் 5 ஆயிரத்து 116 பேரும் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இதுவரை 6 லட்சத்து 66 ஆயிரத்து 479 ேடாஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தற்போது கொரோனாவினால் பாதிக்கப்பட்ட 3 குழந்தைகள் சிகிச்சையில் உள்ளனர். புதுவையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு 100-க்குள் இருந்த நிலையில் தற்போது அதிகரித்து இருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story