தமிழகத்தின் 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு


தமிழகத்தின் 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு
x
தினத்தந்தி 25 July 2021 12:27 AM GMT (Updated: 25 July 2021 12:27 AM GMT)

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.




சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், தென்மேற்கு பருவக்காற்று காரணமாக, தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூா், தேனி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பலத்த மழை பெய்யக்கூடும்.

மேற்கு தொடா்ச்சி மலையை ஒட்டிய திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், திருநெல்வேலி, தூத்துக்குடி, ஈரோடு, சேலம், மதுரை, விருதுநகா், தருமபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவித்து உள்ளது.

சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியசை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியசை ஒட்டியும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story