3 பேரிடம் ரூ.7½ லட்சம் மோசடி

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக 3 பேரிடம் ரூ.7½ லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக 3 பேரிடம் ரூ.7½ லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மோசடி
புதுச்சேரி வாழைக்குளம் நகராட்சி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 22). வெளிநாட்டில் வேலை தேடிக்கொண்டு இருந்தார். இதற்காக சிங்கப்பூரில் வேலை பார்த்து வரும் புதுவை சின்னையாபுரத்தை சேர்ந்த சரவணன் என்பவரை தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது அவர் சென்னை அம்பகரத்தூர் பகுதியை சேர்ந்த தனது நண்பர் திலீப்பை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தினார். வேலை கிடைக்கும் ஆசையில் திலீப்பிடம் தொடர்பு கொண்டு பழனிவேல் பேசியுள்ளார். அவரும் சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக உறுதி கூறினார். இதுதவிர பழனிவேலின் உறவினர்கள் 2 பேரும் வேலைக்காக தொடர்பு கொண்டனர்.
ரூ.7½ லட்சம் மோசடி
இதையடுத்து 3 பேரிடம் இருந்து ரூ.7 லட்சத்து 40 ஆயிரம் வாங்கிக்கொண்டு விமான டிக்கெட் மற்றும் விசா பெற்று கொடுத்தார். ஆனால் அவை போலி என தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பழனிவேல், திலீப்பை தொடர்பு கொண்டு தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். ஆனால் அவர் பணத்தை திருப்பி கொடுக்காமல் காலம் கடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்தில் பழனிவேல் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் திலீப், சரவணன் ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story