மருத்துவ கல்லூரி மாணவர் குத்திக்கொலை


மருத்துவ கல்லூரி மாணவர் குத்திக்கொலை
x
தினத்தந்தி 26 July 2021 4:10 AM IST (Updated: 26 July 2021 4:10 AM IST)
t-max-icont-min-icon

மருத்துவ கல்லூரி மாணவர் குத்திக்கொலை.

சிவகங்கை,

சிவகங்கையை சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் இருதயராஜ் (வயது 60). இவரது மகன்கள் ஜோசப் சேவியர் (25), கிறிஸ்டோபர் (20) ஆகியோர் பிலிப்பைன்ஸ் நாட்டில் எம்.பி.பி.எஸ். படித்து வந்தனர். கொரோனா பரவல் காரணமாக ஊருக்கு வந்த அவர்கள் ஆன்லைன் மூலம் பாடங்களை படித்து வந்தனர்.

வண்டவாசியில் இருந்து அண்ணாமலை நகர் செல்லும் வழியில் உள்ள இவர்களது பாழடைந்த வீட்டில் சிலர் மதுகுடிப்பதாக தகவல் கிடைத்தது. இதனை இருதயராஜ் மற்றும் அவரது மகன்கள் நேற்று நேரில் சென்று கண்டித்தனர். அப்போது அங்கிருந்த 7 பேர் கத்தியால் தந்தை, மகன்களை சரமாரியாக குத்தினார்கள். பின்னர் மோட்டார் சைக்கிள்களில் ஏறி தப்பி சென்று விட்டனர்.

இதில் பலத்த காயம் அடைந்த கிறிஸ்டோபர் அதே இடத்தில் இறந்தார். படுகாயம் அடைந்த ஜோசப் சேவியர், இருதயராஜுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே இந்த கொலை வழக்கு தொடர்பாக சிவகங்கை நேருபஜாரை சேர்ந்த நந்தகுமார் (20), கீழவாணியங்குடியை சேர்ந்த மருதுபாண்டி (21) ஆகிய 2 பேரை தனிப்படை போலீசார் நேற்று இரவு பிடித்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 More update

Next Story