திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்


திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
x
தினத்தந்தி 26 July 2021 2:34 PM GMT (Updated: 26 July 2021 2:34 PM GMT)

ரஜினி மக்கள் மன்றத்தின் 8 மாவட்ட முக்கிய நிர்வாகிகள் அவர்களது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தனர்.

சென்னை,

அண்ணா அறிவாலயத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தனர்.

ரஜினி மக்கள் மன்றத்தின் 8 மாவட்ட முக்கிய நிர்வாகிகள் தங்களது ஆதரவாளர்களுடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

ரஜினி மக்கள் மன்றத்தின் 3 மாவட்டச் செயலாளர்கள், மகளிர் அணி, வர்த்தகர் அணி, வழக்கறிஞர் அணி மற்றும் இளைஞர் அணி செயலாளர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் முதலமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

Next Story