கொரோனா 3-வது அலை வந்தால் எதிர்கொள்ள தயார் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி


கொரோனா 3-வது அலை வந்தால் எதிர்கொள்ள தயார் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
x
தினத்தந்தி 26 July 2021 11:27 PM GMT (Updated: 26 July 2021 11:27 PM GMT)

கொரோனா 3-வது அலை வந்தால் அதை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு தலைமை ஆஸ்பத்திரி, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா நோய் தடுப்பு பணிகள், சுகாதார பணிகளை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். 
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா 3-வது அலை வந்தாலும் எதிர்கொள்ள தேவையான நடவடிக்கை தமிழக அரசால் எடுக்கப்பட்டுள்ளது. எல்லா மாவட்டங்களிலும் அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. குறிப்பாக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் பல இடங்களில் ஏற்படுத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

பக்கத்து மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களின் உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்பட்டு அனுமதிக்கப்படுகிறார்கள். மக்களை தேடி மருத்துவம் என்னும் உன்னத திட்டம் தமிழக முதல்-அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட உள்ளது. 

கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஆட்சிக்காலத்தில் வேகப்படுத்தப்படவில்லை. கடந்த ஜனவரி முதல் மே 7-ந் தேதிக்கு முன்பு அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் நாள் ஒன்றுக்கு 61 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இப்போது நாள் ஒன்றுக்கு ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

Next Story