தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற தலைவராகிறார் சாலமன் பாப்பையா...?


தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற தலைவராகிறார் சாலமன் பாப்பையா...?
x
தினத்தந்தி 27 July 2021 1:30 AM GMT (Updated: 2021-07-27T07:00:45+05:30)

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற தலைவராக பேராசிரியர் மற்றும் பட்டிமன்ற நடுவரான சாலமன் பாப்பையா தேர்வு செய்யப்பட இருக்கிறார்.சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில், இயல் இசை நாடக மன்ற தலைவர் பொறுப்பு உட்பட பல்வேறு பொறுப்புகளுக்கு புதியவர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளார் என தெரிகிறது.

அதன்படி, இயல் இசை நாடக மன்ற தலைவர் பொறுப்புக்கு பேராசிரியர் மற்றும் பட்டிமன்ற நடுவரான சாலமன் பாப்பையாவை மு.க. ஸ்டாலின் தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது.  இதுபற்றி வருகிற ஆகஸ்டு மாதத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

கடந்த 22ந்தேதி, சென்னையில் உள்ள முகாம் அலுவலகத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை சாலமன் பாப்பையா சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.


Next Story