9 முதல் பிளஸ் 2 வரை பள்ளிகளைத் திறப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்-அமைச்சர் தகவல்


9 முதல் பிளஸ் 2 வரை பள்ளிகளைத் திறப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்-அமைச்சர் தகவல்
x
தினத்தந்தி 27 July 2021 5:08 AM GMT (Updated: 27 July 2021 5:08 AM GMT)

சி.எஸ்.ஆர் சமூக பொறுப்பு நிதி மூலம் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளை மேம்படுத்த அனைவரும் முன்வர வேண்டும் என அமைச்சர் கூறினார்.

சென்னை

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. பல மாவட்டங்களில் கிட்டத்தட்ட இயல்பு நிலை திரும்பி விட்டது. இதனால் பொது முடக்கத்திலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பள்ளிகள் திறப்பது குறித்து அரசு பல கட்டங்களாக ஆலோசனை நடத்தி வருகிறது.

தமிழகத்தில் 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறக்க ஆலோசனை நடத்தி வருவதாக தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த  பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்  அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:-

 தமிழகத்தில் 9 ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறக்க ஆலோசனை நடத்தி வருகிறோம். 
பிற மாநிலங்களில் உள்ள நிலவரம் பற்றி முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்ற பின், உரிய முடிவு எடுக்கப்படும்.   இது குறித்த அறிவிப்பை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார்.

சி.எஸ்.ஆர் சமூக பொறுப்பு நிதி மூலம் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளை மேம்படுத்த அனைவரும் முன்வர வேண்டும் என கூறினார்.


Next Story