அ.தி.மு.க. உள்விவகாரங்களில் பா.ஜ.க. தலையிடவில்லை; தமிழக பா.ஜ.க. தலைவர் பேட்டி


அ.தி.மு.க. உள்விவகாரங்களில் பா.ஜ.க. தலையிடவில்லை; தமிழக பா.ஜ.க. தலைவர் பேட்டி
x
தினத்தந்தி 27 July 2021 9:30 PM GMT (Updated: 27 July 2021 9:30 PM GMT)

அ.தி.மு.க. உள்விவகாரங்களில் பா.ஜ.க. தலையிடவில்லை என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேட்டியில் கூறியுள்ளார்.


சென்னை,

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் அளித்துள்ள பேட்டியில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க. இருக்கிறது.  கூட்டணி கட்சி தலைவர்கள், பிரதமரை பார்க்க உரிமை இருக்கிறது.  இதனை எப்படி, அ.தி.மு.க. உள்விவகாரங்களில் பா.ஜ.க. தலையிடுகிறது என்று கூற முடியும்?

பிரதமருடனான சந்திப்பின் போது, தமிழக நலன் தொடர்பாக வலியுறுத்தியதாக, அ.தி.மு.க. தலைவர்களே அறிக்கை விடுத்துள்ளனர்.  இதனை அரசியலாக பார்க்க ஒரு விஷயமும் இல்லை.  எங்கள் கூட்டணி மிக சிறப்பாக இருக்கிறது என்பதற்கு, இதை விட வெளிப்படையாக எதிர்க்கட்சிகளுக்கு சொல்ல முடியாது என்று கூறியுள்ளார்.


Next Story