கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: தமிழக எல்லையில் கண்காணிப்பு தீவிரம்


கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: தமிழக எல்லையில் கண்காணிப்பு தீவிரம்
x
தினத்தந்தி 1 Aug 2021 4:52 AM GMT (Updated: 1 Aug 2021 4:52 AM GMT)

கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழக எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

சென்னை,

கேரளாவில் கொரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகின்றது. மேலும் ஜிகா வைரஸ் தொற்று பரவும் அங்கு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

கேரளாவில் வைரஸ் தொற்று மீண்டும் வேகமாக பரவிவரும் சூழ்நிலையில் தமிழக எல்லைப் பகுதியில் உள்ள சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அங்கு கேரளாவில் இருந்து வருபவர்களிடம் இ-பாஸ் மற்றும் கொரோனா இல்லை என்ற சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பிறகே அவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இதுதவிர கேரளாவை சேர்ந்த பயணிகள் சாலை மார்க்கமாக கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்கள் வழியாக நெல்லைக்கு வருகிறார்கள். அவர்களது வருகை மற்றும் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதார ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர்.

Next Story