கிராம சபை கூட்டங்களை நடத்த கோரி கோவை ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம் - கமல்ஹாசன்


கிராம சபை கூட்டங்களை நடத்த கோரி கோவை ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம் - கமல்ஹாசன்
x
தினத்தந்தி 2 Aug 2021 5:22 AM GMT (Updated: 2 Aug 2021 5:22 AM GMT)

கிராம சபை கூட்டங்களை நடத்த கோரி கோவை ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.

கோவை,

கடந்த சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு சட்டசபை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்நிலையில் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகவும் நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டது. 

அதன் படி,கமல்ஹாசன் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார்.அவருக்கு விமான நிலையத்தில் கட்சி தொண்டர்களும், ரசிகர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சமீரனை சந்தித்து கிராமசபை கூட்டம் மற்றும் பொதுமக்களின் பிரச்சினைகள் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மனு கொடுத்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

கிராம சபை கூட்டங்களை நடத்த கோரி கோவை ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். அடுத்த கிராம சபை கூட்டம் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கிறோம் என்று கூறினார்.

Next Story