சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 குறைவு


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 குறைவு
x
தினத்தந்தி 2 Aug 2021 6:50 AM GMT (Updated: 2021-08-02T12:20:18+05:30)

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 குறைந்துள்ளது.

சென்னை,

சென்னையில் தங்கம் விலை கடந்த மாதம் தொடர்ந்து ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வந்தது. ஒரு நாள் குறைந்தால் மறுநாள் அதிகரித்து ரூ.36 ஆயிரத்திலேயே நீடித்து வந்தது. நேற்று தங்கம் விலை எந்த மாற்றமும் இன்றி ரூ.36,384க்கு விற்பனையாகிறது. 

இந்த நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 குறைந்துள்ளது. இன்றைய நிலவரத்தின் படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.12 குறைந்து ரூ.4,536க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.96 குறைந்து ரூ.36,288க்கு விற்பனையாகிறது. மேலும் வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.73.10க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.73,100க்கும் விற்பனையாகிறது.

Next Story