வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட நாள் இது - முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்


வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட நாள் இது -  முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்
x
தினத்தந்தி 2 Aug 2021 12:04 PM GMT (Updated: 2 Aug 2021 12:07 PM GMT)

தமிழக சட்டப்பேரவையில் 16-வது தலைவராக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படம் இடம் பெற்றுள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் முதன்முதலில், 1921-ம் ஆண்டு மேலவை என்று சொல்லப்படும் சட்டமன்ற கவுன்சில் அமைக்கப்பட்டது. அதன் நூற்றாண்டை கொண்டாடும் வகையில், தமிழக சட்டசபையின் நூற்றாண்டு விழாவும், சட்டசபை அரங்கத்தில், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் உருவப்பட திறப்பு விழாவும் என இருபெரும் விழா இன்று  நடைபெற்றது.

சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள சட்டமன்ற கூட்ட அரங்கத்தில் மாலை 5 மணிக்கு நடைபெற்ற  இந்த விழாவுக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கினார். தலைமை விருந்தினராக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டார். 

சரியாக மாலை 5 மணிக்கு விழா தொடங்குகியது. முதலில் தேசிய கீதமும், தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டது. மாலை 5.05 மணிக்கு சபாநாயகர் மு.அப்பாவு வரவேற்று பேசினார்.அப்போது பேசிய அப்பாவு,  சுதந்திர தினத்தன்று கோட்டையில் முதலமைச்சர் கொடியேற்றும் உரிமையை பெற்று தந்தவர் கருணாநிதி. கருணாநிதியின் உருவ படத்தை திறந்து வைக்க உள்ள குடியரசு தலைவருக்கு தமிழக மக்கள் சார்பாக நன்றி” என்றார். தொடர்ந்து 

மாலை 5.15 மணிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், சட்டசபை அரங்கத்தில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் முழு உருவப்படத்தை திறந்து வைத்தார். அதன்பின்னர் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசிய ஸ்டாலின், “  வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட நாள் இது  சட்டப்பேரவையின் வைர விழா கருணாநிதி தலைமையில் கொண்டாடப்பட்டது.  

முதல்வர், எதிர்க்கட்சி தலைவர், உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் கருணாநிதி. விளிம்பு நிலை மக்களின் நலன் காக்க சட்டப்பேரவை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது” என்றார். 

Next Story