இந்திய அரசியல்வாதிகளில் குறிப்பிடத்தக்க தனித்துவம் மிகுந்தவர் கருணாநிதி -கவர்னர் பன்வாரிலால் புரோஹித் புகழாரம்

இந்திய அரசியல்வாதிகளில் குறிப்பிடத்தக்க தனித்துவம் மிகுந்தவர் கருணாநிதி என கவர்னர் பன்வாரிலால் புரோஹித் புகழாரம் சூட்டினார்.
சென்னை
தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழா மற்றும் கலைஞரின் படத்திறப்பு விழா ஆகியவற்றில் கலந்துகொள்ள இன்று (02.08.2021) மதியம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சென்னை வந்தடைந்தார் சென்னை விமான நிலையத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை கவர்னர் பன்வாரிலால் புரோகித்,முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், உள்ளிட்டோர் வரவேற்றனர்.
அவரது வருகையையொட்டி சென்னையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தலைமைச் செயலகம் விழாக் கோலம் பூண்டுள்ளது. சென்னை வந்ததும் கவர்னர் மாளிகையில் தங்கி ஓய்வெடுத்தார்.
சட்டமன்ற நூற்றாண்டு விழா, கருணாநிதி படத்திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஜார்ஜ் கோட்டை வந்தடைந்தார் . ஜார்ஜ் கோட்டைக்கு வந்த ஜனாதிபதியை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர்.
தேசிய கீதம் மற்றும் தமிழ் தாய் வாழ்த்துடன் தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழா தொடங்கியது.
சட்டமன்றத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதியின் உருவப்படத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவின் தொடக்கமாக சபாநாயகர் அப்பாவு, வரவேற்புரை வழங்கினார்.
விழாவில் அனைவருக்கும் மாலை வணக்கம் என தமிழில் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் உரையைத் தொடங்கினார். தொடர்ந்து பேசிய அவர் கூறியதாவது;-
இந்திய அரசியல்வாதிகளில் குறிப்பிடத்தக்க தனித்துவம் மிகுந்தவர் கருணாநிதி; அனைத்து துறைகளிலும் அறிவு மிகுந்தவராக திகழ்ந்தார். தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு மிகச்சிறந்த வரலாறு உள்ளது; இந்தியாவில் முன்னேறிய மாநிலங்களில் தமிழ்நாடு முக்கிய இடம் வகிக்கிறது.
நன்றி, வணக்கம், ஜெய்ஹிந்த், ஜெய் தமிழ்நாடு எனக் கூறி உரையை நிறைவு செய்தார் கவர்னர்
Related Tags :
Next Story