ஆற்றங்கரைகளில் ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்


ஆற்றங்கரைகளில் ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்
x
தினத்தந்தி 3 Aug 2021 4:39 PM GMT (Updated: 2021-08-03T22:09:34+05:30)

காரைக்காலில் ஆற்றங்கரைகளில் ஆடிப்பெருக்கு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

காரைக்காலில் ஆற்றங்கரைகளில் ஆடிப்பெருக்கு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ஆடிப்பெருக்கு விழா
ஆண்டுதோறும்   ஆடி 18-ந்தேதி அன்று ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுவது வழக்கம். ஆற்றின் கரையோரங்களில் பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக வந்து உற்சாகமாக இந்த விழாவை கொண்டாடுவார்கள். ஆற்றில் ஒன்று கூடும் பெண்கள், புனிதநீராடி படையலிட்டு சிறப்பு பூஜை செய்வார்கள்.
புதுமணத்தம்பதிகள் தங்களது தாலிக்கயிற்றை புதிதாக மாற்றி அணிந்து கொள்வார்கள். திருமணமாகாத பெண்கள் விரைவில் திருமணம் நடக்க வேண்டி வழிபடுவார்கள்.
சிறப்பு வழிபாடு
இந்தநிலையில் நேற்று ஆடிப்பெருக்கையொட்டி காரைக்கால் மதகடி அரசலாறு, திருமலைராஜனாறு, முல்லையாறு, நூலாறு, கடற்கரை மற்றும் குளக்கரைகளில் ஆடிப்பெருக்கை கொண்டாட பெண்கள் குவிந்தனர். நீர்நிலைகளில் காவிரி நீர் பாய்ந்தோடியதால் ஆடிப்பெருக்கை பெண்கள் உற்சாகமாக கொண்டாடினர்.
கரையோர படித்துறையில் பெண்கள் படையலிட்டு சிறப்பு பூஜை செய்து, ஒருவருக்கொருவர் மஞ்சள் கயிற்றை மாற்றிக் கொண்டனர்.
ஆனால் நீர்நிலைகளின் கரைகளை மாவட்ட நிர்வாகம் முறையாக பராமரிக்காததால் பல இடங்களில் சேறும் சகதியுமாக காணப்பட்டது. இதனால் பெண்கள் அவதிப்பட்டனர். 
வரும் காலங்களிலாவது நீர்நிலைகளை முறையாக பராமரிக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story