சொகுசு காருக்கு நுழைவு வரிவிலக்கு கேட்கும் நடிகர் தனுஷ் - நாளை உத்தரவு பிறப்பிப்பு


சொகுசு காருக்கு நுழைவு வரிவிலக்கு கேட்கும் நடிகர் தனுஷ் - நாளை உத்தரவு பிறப்பிப்பு
x
தினத்தந்தி 4 Aug 2021 10:29 AM IST (Updated: 4 Aug 2021 10:31 AM IST)
t-max-icont-min-icon

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கில் நாளை சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பிக்கிறது.

சென்னை,

நடிகர் தனுஷ் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளிநாட்டு சொகுசு கார் ஒன்றை இறக்குமதி செய்தார். இதற்கு வரியாக 60.66 லட்சம் செலுத்துவதற்கு வணிகவரித் துறை உத்தரவிட்டுள்ளது. 

இந்நிலையில் இதை எதிர்த்தும், வரி விலக்கு கோரியும் சென்னை ஐகோர்ட்டில் நடிகர் தனுஷ் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், கடந்த 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 50 சதவீதம் வரி செலுத்தினால் தனுஷின் காரை பதிவு செய்வதற்கு ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு இருந்தது.

இதனையடுத்து  ஐகோர்ட் உத்தரவுப்படி 3.33 லட்சம் வாரியாக நடிகர் தனுஷ் செலுத்தியதால், விதிமுறைகளை பின்பற்றி காரை பதிவு செய்ய ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு 2016-ம் ஆண்டு ஏப்ரலில் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக நாளை சென்னை ஐகோர்ட் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அவர்கள் உத்தரவு பிறப்பிக்க உள்ளார். 

ஏற்கனவே நடிகர் விஜய் வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தனுஷ் வழக்கிலும் உத்தரவு பிறப்பிக்கிறார்.
1 More update

Next Story