கோவிலுக்கு சொந்தமான இடங்களில் கல்வி நிலையங்கள் - அமைச்சர் சேகர்பாபு


கோவிலுக்கு சொந்தமான இடங்களில் கல்வி நிலையங்கள்  - அமைச்சர் சேகர்பாபு
x
தினத்தந்தி 4 Aug 2021 5:47 AM GMT (Updated: 4 Aug 2021 5:47 AM GMT)

கோவிலுக்கு சொந்தமான இடங்களில் கல்வி நிலையங்கள் அமைக்கப்படும் என இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை,

இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவிலுக்கு சொந்தமான இடங்களில் கல்வி நிலையங்கள் அமைக்கப்படும். தமிழகத்தில் மிக விரைவில் நிறைய கல்லூரிகள் அமைக்கப்பட உள்ளது. கோவில் சிலைகளை கடத்தும் நபர்களை கைது செய்து வருகிறோம். திருடு போன சிலைகளை மீட்கும் பணியில் அறநிலையத்துறை தீவிரம் காட்டி வருகிறது என்றார். 

Next Story