சுதந்திரதின அணிவகுப்பு ஒத்திகை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்


சுதந்திரதின அணிவகுப்பு ஒத்திகை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்
x
தினத்தந்தி 6 Aug 2021 1:51 AM GMT (Updated: 2021-08-06T07:21:35+05:30)

சுதந்திரதின அனிவகுப்பு ஒத்திகையையொட்டி சென்னையில் 7, 9, 13 ஆகிய தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை வருகிற நாளை (சனிக்கிழமை) மற்றும் 9 மற்றும் 13-ந்தேதிகளில் சென்னை கோட்டை பகுதியில் நடைபெற உள்ளது. இதையொட்டி மேற்கண்ட 3 நாட்களிலும் கோட்டை பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும்.

அன்றைய தினங்களில் காலை 6.30 மணி முதல் காலை 10 மணி வரை இந்த போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும். அதன்படி நேப்பியர் பாலம் முதல் போர் நினைவுச்சின்னம் வரை உள்ள காமராஜர் சாலை, போர் நினைவுச்சின்னம் முதல் ரிசர்வ் வங்கி சுரங்கபாதையின் வடக்கு பகுதி வரை அமையப்பெற்றுள்ள ராஜாஜி சாலை மற்றும் கொடிமரச்சாலை ஆகிய சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்படும்.

காமராஜர் சாலை, ராஜாஜி சாலை வழியாக பாரிமுனை செல்லும் வாகனங்கள் சுவாமி சிவானந்தா சாலை, அண்ணாசாலை, முத்துசாமி பாலம் வழியாக செல்ல வேண்டும். இதேபோல் பாரிமுனை பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் வடக்கு கோட்டை பக்கசாலை, முத்துசாமி பாலம், அண்ணாசாலை, வாலாஜா சாலை வழியாக போக வேண்டும்.

அண்ணாசாலையில் இருந்து கொடி மரச்சாலை வழியாக பாரிமுனை செல்லும் வாகனங்கள் முத்துசாமி சாலை, ராஜாஅண்ணாமலை மன்றம், என்.எப்.எஸ். சாலை வழியாக போகலாம். முத்துசாமி சாலையில் இருந்து காமராஜர் சாலை செல்லும் வாகனங்கள் அண்ணா சாலை, வாலாஜா சாலை வழியாக செல்லலாம்.

மேற்கண்ட தகவல் போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story