இந்திய மகளிர் ஆக்கி அணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து


இந்திய மகளிர் ஆக்கி அணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
x
தினத்தந்தி 6 Aug 2021 6:19 AM GMT (Updated: 2021-08-06T11:49:25+05:30)

இந்திய மகளிர் ஆக்கி அணி பதக்கத்தை வெல்லும் அளவிற்கு செயல்திறனை வெளிப்படுத்தினர் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

32வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன.  இதில், இன்று நடைபெற்ற ஒலிம்பிக் மகளிர் ஆக்கி வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்திய அணி இறுதிவரை போராடி இங்கிலாந்து அணியிடம் 4-3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்துள்ளது. 

இந்தியா 3 கோல்கள் அடித்த நிலையில், இங்கிலாந்து 4 கோல் அடித்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. இப்போட்டியில் முதல் பாதியில் இந்தியா முன்னிலை பெற்று வந்த நிலையில், இரண்டாம் பாதியில் இங்கிலாந்து முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்தியாவை முதன்முறையாக அரையிறுதி வரை கொண்டு சென்றதற்கு வாழ்த்துகள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் ஆக்கி அணியினரின் ஆட்டம் பதக்கம் பெற்ற பிறரின் முயற்சிகளுக்கு சற்றும் குறைவில்லாதது. இந்திய மகளிர் ஆக்கி அணி பதக்கத்தை வெல்லும் அளவிற்கு செயல்திறனை வெளிப்படுத்தினர். ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்தியாவை முதன்முறையாக அரையிறுதி வரை கொண்டு சென்றதற்கு வாழ்த்துகள். என்று கூறியுள்ளார்.

Next Story