ஊத்தங்கரை அருகே மின்சாரம் தாக்கியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு


ஊத்தங்கரை அருகே மின்சாரம் தாக்கியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 8 Aug 2021 3:28 AM GMT (Updated: 2021-08-08T08:58:43+05:30)

ஊத்தங்கரை அருகே சிங்காரப்பேட்டையில் மின்சாரம் தாக்கியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே சிங்காரப்பேட்டை அம்பேத்கர் நகரில் மின்சாரம் தாக்கியதில் குழந்தை அவந்திகா (3), தாய் மகாலட்சுமி (25), பாட்டி இந்திரா (52)  ஆகிய 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
 
வீட்டின் முன் துணியை காய வைக்கும்போது மின் கம்பியை தொட்டபோது மின் கம்பியிலிருந்து மின்சாரம் தாக்கியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story