தடுப்பூசி தொடர்பாக தமிழகத்தில் 92% பேருக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது - ஆய்வில் தகவல்


தடுப்பூசி தொடர்பாக தமிழகத்தில் 92% பேருக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது - ஆய்வில் தகவல்
x
தினத்தந்தி 8 Aug 2021 1:09 PM (Updated: 8 Aug 2021 1:09 PM)
t-max-icont-min-icon

தமிழகத்தில் 92 சதவீதம் பேருக்கு தடுப்பூசி தொடர்பாக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என ஆய்வில் தெரிய வந்து உள்ளது.

சென்னை

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள  மக்களிடம் தயக்கம் உள்ளதா என்பது குறித்து பொது சுகாதாரத்துறை சார்பாக தமிழகம் முழுவதும் ஆய்வு  நடத்தப்பட்டது.  அந்த ஆய்வில் கூறப்பட்டு உள்ளதாவது:-

92 சதவீத பேருக்கு தடுப்பூசி தொடர்பாக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. 80.3 சதவீத ஆண்களும், 81.6 சதவீத பெண்களும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள ஆர்வம்  காட்டுகின்றனர். 19.7 சதவீத ஆண்கள், 18.4 சதவீத பெண்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்ள தயக்கம் காட்டுகின்றனர்.

கிராமத்தில் 20.3 சதவீதம் பேரும் , நகரில் 17.5 சதவீதம் நபர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் காட்டுகின்றனர்.

வயது வாரியாக எடுத்துக்கொண்டால் 60 வயதிற்கு மேல்  27.6 சதவீதம் பேரும், 45 வயது முதல் 60 வயது வரை  18.2 சதவீதம் பேரும் 18 வயது முதல் 44 வயது வரை 16.9 சதவீதம் பெரும் தயக்கம் காட்டுகின்றனர் என அதில் கூறப்பட்டு உள்ளது.
1 More update

Next Story