தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 28 பேர் உயிரிழப்பு; சுகாதார துறை


தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 28 பேர் உயிரிழப்பு; சுகாதார துறை
x
தினத்தந்தி 8 Aug 2021 2:40 PM GMT (Updated: 8 Aug 2021 2:40 PM GMT)

தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 28 பேர் உயிரிழந்து உள்ளனர் என சுகாதார துறை அறிவித்து உள்ளது.




சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகிறது.  இந்நிலையில், தமிழக சுகாதார துறை இன்று வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,60,229 மாதிரிகள் (நேற்று 1,65,325 பேர்) பரிசோதிக்கப்பட்டுள்ளன.  நேற்றைய எண்ணிக்கையை விட குறைவாக பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இதில், தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,956 பேர் (நேற்று 1,969), (நேற்று முன்தினம் 1,985) கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 28 பேர் (நேற்று 29 பேர்) உயிரிழந்துள்ளனர்.  இதனால் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 34,317 ஆக அதிகரித்துள்ளது. இதில் அரசு மருத்துவமனைகளில் 24 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 4 பேரும் உயிரிழந்துள்ளனர்.  இணைநோய்கள் ஏதும் இல்லாத 4 பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.  தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 20,407 ஆக உள்ளது.

கொரோனாவில் இருந்து இன்று ஒரே நாளில் 1,807 பேர் குணமடைந்துள்ளனர்.  இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25,20,584 ஆக உள்ளது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


Next Story