சென்னை ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி


சென்னை ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 8 Aug 2021 4:42 PM GMT (Updated: 2021-08-08T22:12:05+05:30)

சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் கடந்த 1993-ம் ஆண்டு ஆகஸ்டு 8-ந்தேதி சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் குமரி பாலன், காசிநாதன், ராமசுப்பிரமணியன், ராமகிருஷ்ணரெட்டி, ராஜேந்திரன், சேஷாத்ரி, தேசிகன், பிரேம்குமார், மோகனா, லலிதா மற்றும் ரவீந்திரன் ஆகிய 11 பேர் பலியானார்கள்.

குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆர்.எஸ்.எஸ். சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், 28-வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஆர்.எஸ்.எஸ். 
அலுவலகத்தில் நடந்தது.

இதையொட்டி மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த 11 பேரின் உருவப்படங்களுக்கு, ஆர்.எஸ்.எஸ். உறுப்பினரும், மேகாலயா மாநிலத்தின் முன்னாள் கவர்னருமான சண்முகநாதன் (குண்டு வெடிப்பு நடந்தபோது சம்பவ இடத்தில் இருந்தவர்), ஆர்.எஸ்.எஸ். வட தமிழக அமைப்பாளர் பி.எம்.ரவிக்குமார், விஸ்வ இந்து பரிஷத் (தமிழ்நாடு, கேரளா) அமைப்பாளர் பி.எம்.நாகராஜன் உள்பட நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள், விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகிகள் என பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தினர்.

Next Story