ரவுடி வீட்டில் 4 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்


ரவுடி வீட்டில் 4 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்
x
தினத்தந்தி 9 Aug 2021 7:39 PM GMT (Updated: 2021-08-10T01:09:22+05:30)

புதுச்சேரியில் ரவுடி வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 4 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

புதுச்சேரியில் ரவுடி வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 4 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நாட்டு வெடிகுண்டுகள்
புதுவை பாக்கமுடையான்பேட் மெயின்ரோட்டை சேர்ந்தவர் ரவுடி தீனதயாளன். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் ஒரு வழக்கு தொடர்பாக போலீசார் அவரை தேடி வந்தனர். இதற்கிடையே அவர் வீட்டில் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 
இதையடுத்து கோரிமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தாஜன் மற்றும் சிறப்பு அதிரடிப்படை போலீசார் அவரது வீட்டுக்கு விரைந்து சென்றனர். ஆனால் வீட்டில் யாரும் இல்லை.
பறிமுதல்
இதைத்தொடர்ந்து வீட்டில் போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது வீட்டின் மொட்டை மாடியில் ஒரு வாளியில் மணல் நிரப்பி வைக்கப்பட்டிருந்தது. சந்தேகம் அடைந்த போலீசார் வாளியில் இருந்த மணலை கொட்டி பார்த்தனர். அப்போது வாளியில் 4 நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. 
அதையடுத்து அந்த 4 நாட்டு வெடிகுண்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவுடி தீனதயாளனை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story