தபால் சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதிகள்


தபால் சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதிகள்
x
தினத்தந்தி 11 Aug 2021 2:28 AM IST (Updated: 11 Aug 2021 2:28 AM IST)
t-max-icont-min-icon

தபால் சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதிகள்.

சென்னை,

தபால் சேமிப்பு கணக்கு திட்டத்தில் சேர்ந்திருக்கும் வாடிக்கையாளர்களுக்காக தபால் துறை பல்வேறு கூடுதல் வசதிகளை கட்டணமின்றி அளித்து வருகிறது. குறிப்பாக ஏ.டி.எம். அட்டை கட்டணமின்றி வழங்கப்படுகிறது. இதனை பயன்படுத்தி அனைத்து ஏ.டி.எம். மையங்களிலும் பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.

தபால் அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ள ஏ.டி.எம்.களில் எத்தனை முறை பரிவர்த்தனைகள் மேற்கொண்டாலும் அதற்கு கட்டணம் இல்லை. வங்கி ஏ.டி.எம்.களில், ஒரு மாதத்தில் நான்காவது முறையாக மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனையில் இருந்து குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இணையவழி மூலமாக தபால் சேமிப்பு கணக்குகளுக்கு இடையே நிதி பரிமாற்றம் செய்யலாம். ஆன்லைன் வாயிலாக சேமிப்பு கணக்குகளைத் தொடங்கவும், முடிக்கவும் முடியும். கணக்கில் இருக்கும் நிலுவைத்தொகையையும் பார்வையிடலாம்.

தபால் நிலையத்திற்கு வராமல் வாடிக்கையாளர்கள் இந்த வசதிகளைப் பயன்படுத்தி பரிவர்த்தனைகள் செய்து கொள்ளலாம் என்று அண்ணாசாலை தலைமை தபால் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
1 More update

Next Story