கேரளாவில் நிபா வைரஸ் - தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை


கேரளாவில் நிபா வைரஸ் - தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை
x
தினத்தந்தி 5 Sept 2021 10:49 AM IST (Updated: 5 Sept 2021 10:49 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகங்களுக்கு தமிழக மருத்துவ நல்வாழ்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழக மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தி உள்ளார். 

மேலும்  கேரள மாநிலத்தை ஒட்டிய தமிழக மாவட்டங்களில் கண்காணிப்பு பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது என்றும், கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களை  சேர்ந்தவர்கள் தமிழகம் வருவதை கண்காணிக்க  தமிழக மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
1 More update

Next Story