தாம்பரம், ஆவடியில் புதிய போலீஸ் கமிஷ்னர் அலுவலகம் - மு.க.ஸ்டாலின்


தாம்பரம், ஆவடியில் புதிய போலீஸ் கமிஷ்னர் அலுவலகம் - மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 13 Sept 2021 3:43 PM IST (Updated: 13 Sept 2021 3:43 PM IST)
t-max-icont-min-icon

தாம்பரம், ஆவடியை தலைமையிடமாக கொண்டு தனித்தனி போலீஸ் கமிஷ்னர் அலுவலகம் அமைக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக சட்டப்பேரவையில் கடைசி நாள் கூட்டம் இன்று நடைபெற்று வருகின்றது. இன்றைய கூட்டத்தில் காவல்துறைக்கு பல்வேறு அறிவிப்புகளை முதல்-அமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார்.

அப்போது, "தாம்பரம், ஆவடியை தலைமையிடமாக கொண்டு தனித்தனி புதிய போலீஸ் கமிஷனர் அலுவலகங்கள் அமைக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

தற்போது தாம்பரம், ஆவடி ஆகிய இரண்டு பகுதிகளும் சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தின் கட்டுப்பாட்டிற்குள் உள்ளது.

முன்னதாக, பல்லாவரம், தாம்பரம் உள்ளிட்ட நகராட்சிகளை ஒன்றிணைத்து தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.
1 More update

Next Story