கொரோனா தடுப்பூசியுடன் உணவு பொருட்கள் பரிசு

மலைவாழ் மக்களுக்கு கொரோனா தடுப்பூசியுடன் உணவு பொருட்கள் பரிசு வழங்கப்பட்டது.
உசிலம்பட்டி,
உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட குறிஞ்சி நகர் பகுதியில் மலைவாழ் மக்கள் 70 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த ஞாயிற் றுக்கிழமை நடத்தப்பட்ட தடுப்பூசி முகாமில் அந்த பகுதியில் உள்ள சில பொதுமக்கள் கலந்துகொள்ளாமல் அந்த பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் மீது ஏறி கொரோனா தடுப்பூசி போடாமல் தவிர்த்து வந்தனர். இந்த நிலையில், நேற்று மீண்டும் தடுப்பூசி முகாம் நடை பெற்றது. இதில் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் நபர்களுக்கு அரிசி மற்றும் காய் கனி தொகுப் பினை வழங்கி தடுப்பூசி போட ஊக்குவித்தனர். நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் பால முருமகாராஜா, தலைமையில் மாவட்ட நல குழு உறுப் பினர் வக்கீல் மலைச்சாமி, மாவட்ட குழந்தைகள் நல குழு உறுப் பினர் பாண்டியராஜா முன்னிலையில் நடைபெற்றது. இதில் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகர், உசிலம் பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு நல்லு ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொள்ளும் கிராமத்தில் உள்ள 70 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் காய்கனிகளை வழங்கினர். நிகழ்ச்சியில் உசிலம்பட்டி தாசில்தார் விஜயலட்சுமி, உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கண்ணன், தொட்டப்பநாயக்கனூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சுசீலா, மண்டல துணை வட்டார அலுவலர் தெய்வராமன், கிராம நிர்வாக அலுவலர் ரம்யா, ஊராட்சி துணை தலைவர் மணிமாறன், வார்டு உறுப்பினர் ரங்கநாதன் மற்றும் தூய்மை பணியாளர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். ஊராட்சி செயலாளர் மகேசுவரன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story






