மதுரை-துபாய் விமான சேவை இன்று முதல் தொடக்கம்


மதுரை-துபாய் விமான சேவை இன்று முதல் தொடக்கம்
x
தினத்தந்தி 30 Sep 2021 10:52 PM GMT (Updated: 30 Sep 2021 10:52 PM GMT)

மதுரை-துபாய் விமான சேவை இன்று முதல் தொடங்குகிறது.

மதுரை,

கொரோனா பரவல் காரணமாக சர்வதேச விமான சேவை தடை செய்யப்பட்ட நிலையில், மதுரையில் இருந்து துபாய்க்கு ஏர்பபுள் ஒப்பந்தப்படி இன்று (1-ந் தேதி) முதல், ஸ்பைஸ் ஜெட் விமான சேவை தொடங்குகிறது. இதற்காக 175 பயணிகள் முன்பதிவு செய்திருக்கிறார்கள். வாரத்திற்கு 3 நாட்களுக்கு மதுரை - துபாய் மற்றும் துபாய் - மதுரை இடையே விமான சேவை நடைபெறுகிறது. 

அதன்படி, துபாயில் இருந்து மதுரைக்கு திங்கள், வியாழன், சனிக்கிழமைகளில் அதிகாலை 3.35 மணிக்கு (துபாய் நேரம்) புறப்பட்டு மதுரைக்கு காலை 9.20 மணிக்கு (இந்திய நேரம்) வந்து சேரும். அதுபோல் மதுரையில் இருந்து துபாய்க்கு ஞாயிறு, புதன், வெள்ளிக்கிழமைகளில் பகல் 11.50 மணிக்கு (இந்திய நேரம்) புறப்பட்டு துபாய்க்கு மதியம் 2.35 மணிக்கு (துபாய் நேரம்) சென்றடையும். கொரோனா 2 கட்ட தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story