திண்டுக்கல் அருகே மின்சாரம் பாய்ந்து தந்தை - 2 மகன்கள் பலி


திண்டுக்கல் அருகே மின்சாரம் பாய்ந்து தந்தை -  2 மகன்கள் பலி
x
தினத்தந்தி 1 Oct 2021 9:49 AM GMT (Updated: 1 Oct 2021 9:49 AM GMT)

திண்டுக்கல் அருகே மின்சாரம் பாய்ந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, 2 மகன்கள் உயிரிழந்தனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம், செட்டிபட்டியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மகன்கள் சந்தோஷ்குமார்(15), விஜய் கணபதி (17). திருப்பதி வீட்டின் அருகே துணி காயவைப்பதற்காக, அங்கு கட்டப்பட்டிருந்த கம்பியை  தொட்டார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உள்ளது. 

அதனைத் தொடர்ந்து அவரை காப்பாற்றுவதற்காக மகன்கள் சந்தோஷ்குமார் மற்றும் விஜய் கணபதி ஆகியோர் சென்றுள்ளனர். இதில் மூவருமே மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இவர்களை காப்பாற்றுவதற்காக சென்ற பக்கத்து வீட்டுக்காரர்கள் முருகன், சூர்யா உள்ளிட்டோரும் மின்சாரம் தாக்கி காயம் அடைந்தனர். முருகன், சூர்யா ஆகியோர் சிகிச்சைக்காக  திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதுகுறித்து அம்பாத்துரை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் திண்டுக்கல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story