தாம்பரம், ஆவடி: புதிய கமிஷனர்கள் நியமனம்


தாம்பரம், ஆவடி: புதிய கமிஷனர்கள் நியமனம்
x
தினத்தந்தி 1 Oct 2021 3:50 PM IST (Updated: 1 Oct 2021 3:50 PM IST)
t-max-icont-min-icon

தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனராக ஐ.பி.எஸ் அதிகாரி ரவியும், ஆவடி மாநகர போலீஸ் கமிஷனராக ஐ.பி.எஸ் அதிகாரி சந்தீப் ராய் ரத்தோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை,

புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகத்திற்கு சிறப்பு அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது.  அதன்படி, தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்துக்கு சிறப்பு அதிகாரியாக எம்.ரவி நியமிக்கப்பட்டுள்ளார். ஆவடி மாநகர காவல் ஆணையரகத்துக்கு சிறப்பு அதிகாரியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார். 

இது தொடர்பாக, தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் இன்று வெளியிட்ட அறிவிப்பில்,

"1. நிர்வாகம் (சென்னை) ஏடிஜிபியாகப் பதவி வகித்து வரும் எம்.ரவி, தாம்பரம் மாநகரக் காவல் ஆணையரகத்தின் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

2. அமலாக்கப் பிரிவு (சென்னை) ஏடிஜிபியாகப் பதவி வகித்து வரும் சந்தீப் ராய் ரத்தோர், ஆவடி மாநகரக் காவல் ஆணையரகத்தின் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

3. பொருளாதாரக் குற்றத் தடுப்புப்பிரிவு (சென்னை) ஐஜியாகப் பதவி வகித்து வரும் அபின் தினேஷ் மோதக், அடுத்த உத்தரவு வரும் வரை அப்பிரிவின் ஏடிஜிபி பொறுப்பையும் கூடுதலாகக் கவனிப்பார்".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஆவடி, தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்ந்த நிலையில், மாநகர காவல் ஆணையராக சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
1 More update

Next Story