47-வது நினைவு தினம்: காமராஜர் நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி


47-வது நினைவு தினம்: காமராஜர் நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி
x
தினத்தந்தி 2 Oct 2021 5:41 PM GMT (Updated: 2 Oct 2021 5:41 PM GMT)

காமராஜரின் 47-வது நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சியினர், நாடார் சங்கத்தினர் அஞ்சலி செலுத்தினர். அன்னதானம் - நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.

சென்னை, 

தமிழகத்தில் பொற்கால ஆட்சி தந்த முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜரின் 47-வது நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. நினைவிட வளாகத்தில் இருந்த காமராஜரின் மார்பளவு சிலையும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, அதற்கு கீழே அவரது உருவப்படமும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அவர்களுடன் சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க தலைவர் த.பத்மநாபன், செயலாளர்கள் சந்திரசேகர், ராஜ்குமார், பொருளாளர் எம்.மாரித்தங்கம் உள்பட நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினர். தி.மு.க. மகளிரணி பிரசாரக்குழு செயலாளர் சிம்லா முத்துசோழன் உள்பட நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினர்.

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் ஏற்பாட்டில் காமராஜர் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மாவட்ட செயலாளர் விருகை ரவி, மாநில துணை செயலாளர் ஈ.சி.சேகர், முன்னாள் எம்.பி. ஜெ.ஜெயவர்தன் உள்பட நிர்வாகிகள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். ஜி.சந்தானம், ஆர்.சிவகுமார் உள்பட பெருந்தலைவர் மக்கள் கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, பொதுச்செயலாளர் தளபதி பாஸ்கர், விஜய் வசந்த் எம்.பி., ஹசன் மவுலானா எம்.எல்.ஏ. உள்பட நிர்வாகிகள், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமையில் துணைத்தலைவர் எம்.என்.ராஜா, பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், செயற்குழு உறுப்பினர் மாதவி பாஸ்கரன், மாவட்ட செயலாளர் என்.ஆர்.பி.ஆதித்தன் உள்பட நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். அவர்களுடன் பா.ஜ.க. நிர்வாகியும், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயருமான (பொறுப்பு) கராத்தே தியாகராஜனும் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் பேட்டியளித்த அண்ணாமலை, ‘காமராஜரின் நினைவிடத்துக்கு சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகிய காங்கிரஸ் தலைவர்களே நேரில் வந்து அஞ்சலி செலுத்தவில்லை. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட அஞ்சலி செலுத்த வரவில்லை. சிதிலமடைந்த காமராஜர் நினைவு மண்டபத்தை சீரமைத்து தர தமிழக பா.ஜ.க. தயாராக இருக்கிறது’ என்று தெரிவித்தார்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் பொதுச்செயலாளர் விடியல் சேகர், தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், மாவட்ட தலைவர் சைதை மனோகரன் உள்பட நிர்வாகிகள்,

பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தலைமையில் துணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, அமைப்பு செயலாளர் மு.ஜெயராமன், மாவட்ட செயலாளர் வே. வடிவேல் உள்பட நிர்வாகிகள்,

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தலைமையில் பொருளாளர் ஏ.என்.சுந்தரேசன், மண்டல செயலாளர் மகாலிங்கம், செய்தி தொடர்பாளர் சேதுராமன் உள்பட நிர்வாகிகள்,

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ந.செல்லதுரை, வி.கோ.ஆதவன், ஆர்.செல்வம் உள்பட நிர்வாகிகளும், அ.ம.மு.க. தேர்தல் பிரிவு செயலாளர் ஜி.செந்தமிழன் தலைமையில் செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி உள்பட நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினர்.

தட்சணமாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன், பொருளாளர் ஏ.செல்வராஜ், சென்னை வாழ் நாடார் சங்க பொதுச்செயலாளர் டி.தங்கமுத்து, துணைத்தலைவர் சி.சின்னதுரை, பொருளாளர் கே.வி.பி.பூமிநாதன், செயலாளர் கே.எம்.செல்லதுரை, ஆலந்தூர் வட்டார நாடார்கள் சங்க கவுரவ தலைவர் டி.சிவபால், தலைவர் பி.கணேசன், இந்திய நாடார்கள் பேரமைப்பு தலைவர் ராகம் சவுந்திரபாண்டியன், பொதுச்செயலாளர் கே.எஸ்.மலர்மன்னன், தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்க தலைவர் ஆர்.சந்திரன் ஜெயபால், ஒருங்கிணைப்பாளர் மாரீஸ்வரன்,

தமிழ்நாடு நாடார் சங்கத்தலைவர் ஜெ.முத்துரமேஷ் நாடார், பொதுச்செயலாளர் வி.எல்.சி.ரவி, பொருளாளர் சிவராஜ், அய்யா வைகுண்டர் மக்கள் கட்சி ஒருங்கிணைப்பாளர் சி.மு.ரவிகுமார், தென்னிந்திய நாடார் சங்க பொருளாளர் பொன்ராஜ், தேசிய நாடார் சங்க பொதுச்செயலாளர் டி.விஜயகுமார், தமிழ்நாடு வணிகர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் அரசன் ராமச்சந்திரன், பாண்டியநாடு நாடார் பேரவை தலைவர் பொன்.கருக்குவேல் ராஜன், திருவொற்றியூர் நாடார் உறவின்முறை தலைவர் எஸ்.நளராஜன், செயலாளர் எம்.காமாட்சி, காமராஜர் ஆதித்தனார் கழக தலைவர் சிலம்பு சுரேஷ், அகில இந்திய நாடார் மகாஜன சபை மாநிலத்தலைவர் கே.எஸ்.எம்.கார்த்திகேயன், பொதுச்செயலாளர் வைரவன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மின்னல் எச்.ஸ்டீபன் தலைமையில் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். அதனைத்தொடர்ந்து 100 ஏழை பெண்களுக்கு இலவச சேலை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஏழை பெண்களுக்கு சேலைகள் வழங்கினார்.

தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் கே.சி.ராஜா, திருவல்லிக்கேணி வட்டார நாடார் சங்க பொதுச்செயலாளர் சந்தீப்ராஜா, பொருளாளர் அழகேசன், தமிழ்நாடு நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் லட்சுமணன், நாடார் மகாஜன சங்க துணைத்தலைவர் ஆர்.பி.மனோகரன், இணை செயலாளர் ஏ.வி.எஸ்.மாரிமுத்து, சென்னை மண்டல நாடார்கள் பேரமைப்பு தலைவர் ஜி.சங்கர், நெல்லை நகர டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றத்தின் தலைவர் டி.முல்லைராஜா, சென்னை நாடார் பாதுகாப்பு பேரவை தலைவர் சீனிவாசன், திருவல்லிக்கேணி நாடார் சங்க தலைவர் பி.பரமசிவம், எர்ணாவூர் நாடார் உறவின்முறை பொதுச்செயலாளர் எஸ்.சுந்தரேசன், கெருகம்பாக்கம் நாடார் சங்க தலைவர் டி.உதயகுமார், துரைப்பாக்கம்-பெருங்குடி வட்டார நாடார் ஐக்கிய பேரவை தலைவர் டி.எஸ்.சந்திரசிங் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

முகப்பேர் வட்டார நாடார் மகாஜன சங்க செயலாளர் டிக்சன், நாடார் மகாஜன சங்க தலைவர் முத்துசாமி, நாடார்கள் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் பெரிஸ் மகேந்திரவேல், பெரம்பூர் வட்டார நாடார்கள் ஐக்கிய சங்க செயலாளர் வள்ளிநாயகம், நாடார் பேரவை மாவட்ட தலைவர் மாரிமுத்து, அண்ணா எம்.ஜி.ஆர். திராவிட மக்கள் கழக தலைவர் முத்துராமன் சிங்கபெருமாள், பூந்தமல்லி நாடார் சங்க தலைவர் ஜெயகுமார், நசரத்பேட்டை நாடார் சங்க தலைவர் முருகேசன், அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சி தேசிய தலைவர் பா.இசக்கிமுத்து, மாநிலத்தலைவர் மணிஅரசன், தமிழன்னை கலைமன்ற செயலாளர் ரவி உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், சினிமா சண்டை பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம், காமராஜர் பேத்தி மயூரி கண்ணன், தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்க தலைவி கிருஷ்ணா ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் கொளத்தூர் த.ரவி உள்பட ஏராளமானோர் காமராஜர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக காமராஜர் நினைவிடத்தில் தமிழ்நாடு நாடார் சங்கம் சார்பில், ‘மதுரையில் உள்ள காமராஜர் பல்கலைக்கழகத்தில் காமராஜர் பெயரில் ஆய்வு இருக்கை அமைப்பதற்கு தமிழக அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும்’, என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காமராஜர் நினைவு தின வளாகத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது.

Next Story