சட்டசபை தேர்தல் தோல்விக்கு தவறான வியூகம் காரணம்; அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்


சட்டசபை தேர்தல் தோல்விக்கு தவறான வியூகம் காரணம்; அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்
x
தினத்தந்தி 3 Oct 2021 11:10 PM GMT (Updated: 3 Oct 2021 11:10 PM GMT)

தமிழக சட்டசபை தேர்தல் தோல்விக்கு தவறான வியூகமே காரணம் என அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.


விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் வரும் 6 மற்றும் 9 ஆகிய நாட்களில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், மக்கள் மத்தியில் அ.தி.மு.க.வுக்கு நல்ல பெயர் உள்ளது.  ஆனால் தி.மு.க.வினருக்கு அப்படி இல்லையென கூறினார்.

தமிழகத்தில் தற்போது சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு போயுள்ளது.  மின்சார தட்டுப்பாடு நிலவுகிறது.  மக்களை பற்றி கவலைப்படாத கட்சியாக தி.மு.க. உள்ளது என சாடினார்.  கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் மீது எந்த குற்றமும் குறையும் சொல்ல முடியாது.  சட்டமன்ற தேர்தலில் தவறான தேர்தல் வியூகத்தால் ஒரு சதவீத வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழக்க நேரிட்டது என கூறினார்.


Next Story