மாநில செய்திகள்

அண்ணா பல்கலை கழகம் மீது ரூ.16 கோடி வரி ஏய்ப்பு புகார் + "||" + Rs 16 crore tax evasion complaint against Anna University

அண்ணா பல்கலை கழகம் மீது ரூ.16 கோடி வரி ஏய்ப்பு புகார்

அண்ணா பல்கலை கழகம் மீது ரூ.16 கோடி வரி ஏய்ப்பு புகார்
சென்னை அண்ணா பல்கலை கழகம் மீது ரூ.16 கோடி வரி ஏய்ப்பு புகார் எழுந்துள்ளது.

சென்னை,

சென்னை அண்ணா பல்கலை கழகம் சர்வதேச அளவில் புகழ்பெற்ற தொழில்நுட்ப கல்வி நிறுவனம்.  ஜி.எஸ்.டி., அறிமுகப்படுத்தியது முதல், இதுவரை வரி செலுத்தாமல் ஏய்ப்பில் ஈடுபட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  இதுகுறித்து, பல்கலை வட்டாரங்கள் கூறும்போது, அண்ணா பல்கலை கழக தேர்வு மையம், உறுப்பு கல்லுாரி சேவை மையம், ஆராய்ச்சி மையம் என 40க்கும் மேற்பட்ட மையங்கள் செயல்படுகின்றன.

இந்த பல்கலையின் கீழ், ஏராளமான என்ஜினியரிங் உறுப்பு கல்லுாரிகளும் இயங்குகின்றன.  உறுப்பு கல்லுாரிகளுக்கு, பல்கலை வழங்கும் சேவைக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரியை சம்பந்தப்பட்ட கல்லுாரிகள் செலுத்த வேண்டும்.

கல்லுாரிகளிடமிருந்து பெறும் வரியை, அரசுக்கு அண்ணா பல்கலை செலுத்த வேண்டும்.  ஆனால், அண்ணா பல்கலை பொது ஜி.எஸ்.டி. பதிவு எண் என இதுவரை ஏதும் பெறாமல், நோட்டுகளில் கணக்கு விபரங்களை பராமரித்து வருகிறது.

இதன்படி, கல்லுாரிகளிடம் வசூலித்த 100 கோடி ரூபாய்க்கு 16 கோடி ரூபாய் வரை, ஜி.எஸ்.டி. வரி செலுத்த வேண்டும். ஆனால், இதுவரை செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்துள்ளது. இந்த வரி ஏய்ப்பு தொடர்பாக, ஜி.எஸ்.டி. அதிகாரிகள ஆய்வு செய்து சென்று உள்ளனர் என கூறப்படுகிறது.  இதனால், வரி ஏய்ப்புக்கு நிகரான அபராதம் விதிக்கப்படும் என கூறப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. சினேகாவை ஏமாற்றிய ஏற்றுமதி நிறுவனம் - போலீசில் புகார்
பிரபல நடிகையாக இருக்கும் சினேகா, தன்னிடம் தனியார் ஏற்றுமதி நிறுவனம் ஒன்று பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றி விட்டதாக புகார் கொடுத்து இருக்கிறார்.
2. கட்டுப்பாட்டு அறைக்கு ஒரே நேரத்தில் 50 பேர் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்: சென்னை மாநகராட்சி கமிஷனர்
ரிப்பன் மாளிகையில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரே நேரத்தில் 50 பேர் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.
3. ‘அன்பு செல்வன்’ படக்குழு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் கவுதம் மேனன் புகார்
இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் தற்போது ‘வெந்து தணிந்தது காடு’ படம் தயாராகி வருகிறது, இப்படத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்கிறார்.
4. ஆபாச படம் வெளியிட்டதாக தி.மு.க. பிரமுகர் மீது நடிகை காயத்ரி ரகுராம் பரபரப்பு புகார்
இணைய தளங்களில் தன்னை பற்றிய ஆபாசபடங்களை வெளியிட்டுள்ளதாக தி.மு.க. பிரமுகர் மீது நடிகை காயத்ரி ரகுராம் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்தார்.
5. வீட்டை விட்டு நடிகையை வெளியே தள்ளியதாக புகார்
தமிழில் அன்பே ஆருயிரே, லீ, மருதமலை, ஜாம்பவான், காளை உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நிலா.