உள்ளாட்சித் தேர்தல் 2-ம் கட்ட பிரச்சாரம் : இன்று மாலையுடன் நிறைவு


உள்ளாட்சித் தேர்தல் 2-ம் கட்ட பிரச்சாரம் : இன்று மாலையுடன் நிறைவு
x
தினத்தந்தி 7 Oct 2021 8:39 AM GMT (Updated: 7 Oct 2021 8:39 AM GMT)

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது.

சென்னை,

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதி 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. அத்துடன் இதர 28 மாவட்டங்களில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தல் 9 ஆம் தேதி நடக்கிறது.

முதற்கட்ட தேர்தல் நேற்று முடிந்த நிலையில் 2-ம் கட்ட தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் இன்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் நிறைவு பெறுவதாகவும், 9 ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளதாகவும் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வெளியாட்கள் இன்று மாலை 5 மணிக்குள்ளாக வெளியேறும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைவதால், வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

Next Story