ஊரக உள்ளாட்சித் தேர்தல்: 2-ம் கட்ட பிரச்சாரம் நிறைவு


ஊரக உள்ளாட்சித் தேர்தல்: 2-ம் கட்ட பிரச்சாரம் நிறைவு
x
தினத்தந்தி 7 Oct 2021 4:27 PM GMT (Updated: 2021-10-07T21:57:52+05:30)

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்தது.

சென்னை,

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதி 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. அத்துடன் இதர 28 மாவட்டங்களில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தல் 9 ஆம் தேதி நடக்கிறது.

முதற்கட்ட தேர்தல் நேற்று முடிந்த நிலையில் 2-ம் கட்ட தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேர்த்ல் நடைபெறும் இடங்களில் 9 ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடுவதற்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதையடுத்து தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களிலும் இன்று மாலை 5 மணியுடன் 2-ம் கட்ட தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெற்றது.

Next Story