ஊரக உள்ளாட்சி தேர்தல்: சபாநாயகர் அப்பாவு வாக்களித்தார்


ஊரக உள்ளாட்சி தேர்தல்: சபாநாயகர் அப்பாவு வாக்களித்தார்
x
தினத்தந்தி 9 Oct 2021 4:24 AM GMT (Updated: 2021-10-09T11:05:38+05:30)

வள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்திற்கான உள்ளாட்சி தேர்தலில் சபாநாயகர் அப்பாவு வாக்களித்தார்.

நெல்லை,

தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சீபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2-ம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கிய மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்கை செலுத்தி வருகின்றனர். 

இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்திற்கான உள்ளாட்சி தேர்தலில் தமிழ்நாடு சட்டசபை சபாநாயகர் அப்பாவு வாக்களித்தார். பணகுடி அருகே உள்ள தனது சொந்த கிராமமான லெப்பை பெரியநாயகிபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் சபாநாயகர் அப்பாவு தனது வாக்கை பதிவு செய்தார்.

Next Story