ஊரக உள்ளாட்சித் தேர்தல்: பிற்பகல் 3 மணி வரை 60.34% வாக்குகள் பதிவு


ஊரக உள்ளாட்சித் தேர்தல்: பிற்பகல் 3 மணி வரை 60.34% வாக்குகள் பதிவு
x
தினத்தந்தி 9 Oct 2021 11:54 AM GMT (Updated: 2021-10-09T18:00:45+05:30)

2-ம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 60.34 % வாக்குகள் பதிவாகியுள்ளன.

சென்னை,

தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சீபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

முதல்கட்ட தேர்தல் 6-ந் தேதி நடந்து முடிந்தது. 14 ஆயிரத்து 662 பதவியிடங்களுக்கு நடந்த இந்த தேர்தலில் 77.43 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. வாக்குபெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் 74 மையங்களில் வைக்கப்பட்டுள்ளன.

இதனை தொடர்ந்து 9 மாவட்டங்களில் உள்ள 35 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 62 மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவிகள், 626 ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவிகள், 1,324 கிராம ஊராட்சி தலைவர் பதவிகள், 10,329 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் என மொத்தம் 12 ஆயிரத்து 341 இடங்களுக்கு இன்று தேர்தல் நடக்கிறது.

2வது கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது.  இதில் வாக்காளர்கள் காலை முதல் ஆர்வத்துடன் வந்து வரிசையில் நின்று வாக்களித்துச் செல்கின்றனர். இந்த நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 60.34% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

இதன்படி, மாவட்ட வாரியாக பதிவான வாக்குகள்;-

விழுப்புரம் - 70.62%

கள்ளக்குறிச்சி - 65.84%

ராணிப்பேட்டை - 63.81%

தென்காசி - 57.62%

செங்கல்பட்டு - 56.78%

காஞ்சிபுரம் - 55.90%

வேலூர் - 54.50%

திருப்பத்தூர் - 54.33%

நெல்லை - 50%


மேலும் மாவட்ட வாரியாக பதிவான வாக்குகளின் விவரம்;-

அரியலூர் - 68.31%

கோவை - 60.88%

கடலூர் - 64.89%

தர்மபுரி - 50.26%

திண்டுக்கல் - 56.18%

ஈரோடு - 57.45%

கன்னியாகுமரி - 41.71%

கரூர் - 69.79%

கிருஷ்ணகிரி - 61.31%

மதுரை - 62.97%

மயிலாடுதுறை - 62.19%

நாகப்பட்டினம் - 66.87%

நாமக்கல் - 72.28%

பெரம்பலூர் - 71.27%

புதுக்கோட்டை - 59.66%

ராமநாதபுரம் - 55.58%

சேலம் - 66.40%

சிவகங்கை - 57.65%

தஞ்சாவூர் - 49.97%

தேனி - 63.23%

நீலகிரி - 53.68%

தூத்துக்குடி - 55.85%

திருச்சி - 66.06%

திருப்பூர் - 56.37%

திருவள்ளூர் - 47.59%

திருவண்ணாமலை - 67.90%

திருவாரூர் - 59.45%

விருதுநகர் - 52.06%

மேற்கண்ட விவரங்களை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது.

Next Story