முதல் அமைச்சரின் பாதுகாப்பிற்கு செல்லும் கான்வாய் வாகனங்களின் எண்ணிக்கை குறைப்பு


முதல் அமைச்சரின் பாதுகாப்பிற்கு செல்லும் கான்வாய் வாகனங்களின் எண்ணிக்கை குறைப்பு
x
தினத்தந்தி 9 Oct 2021 1:52 PM GMT (Updated: 2021-10-09T19:22:25+05:30)

பொதுமக்களின் வாகனங்களை நிறுத்தாமல் மற்ற வாகனங்களுடன் சேர்ந்தே முதல் அமைச்சர் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பாதுகாப்பிற்காக செல்லும் கான்வாய் வாகனங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோர் அடங்கிய ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொதுமக்களின் வாகனங்களை நிறுத்தாமல் மற்ற வாகனங்களுடன் சேர்ந்தே  முதல் அமைச்சர் செல்லும் வகையில் ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமாக முதல் அமைச்சரின்  பாதுகாப்பிற்காக 12 முதல் 13 வாகனங்கள் செல்லும். 

அந்த வாகனங்களில் எண்ணிக்கை தற்போது ஆறாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்ற வகையில் இந்த முடிவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story