கோவில்களை தமிழக அரசு விரைவில் திறக்கும்


கோவில்களை தமிழக அரசு விரைவில் திறக்கும்
x
தினத்தந்தி 11 Oct 2021 7:57 PM GMT (Updated: 2021-10-12T01:27:14+05:30)

கோவில்களை தமிழக அரசு விரைவில் திறக்கும் என்று தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்தார்.

கோவில்களை தமிழக அரசு விரைவில் திறக்கும் என்று தமிழக பா.ஜ.க. மாநில       தலைவர் அண்ணாமலை    நம்பிக்கை தெரிவித்தார்.
சாமி தரிசனம்
தமிழக பா.ஜனதா கட்சியின்     மாநில  தலைவர் அண்ணாமலை     நேற்று மாலை திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். அவரை காரைக்கால் மாவட்ட பா.ஜ.க. தலைவர் துரை சேனாதிபதி, மாநில செயலாளர் அருள்முருகன், தமிழக மாநில செயலாளர் கருப்பு முருகானந்தம் உள்பட நிர்வாகிகள் பலர் வரவேற்றனர். பின்னர் அவர் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் நாட்டு மக்கள் அனைவரும் நலம் பெற வேண்டும் என கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டார்.
கோவில்கள் திறக்கப்படும்
இதைத்தொடர்ந்து தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுச்சேரியில் பா.ஜ.க., என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசு சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறது. முந்தைய அரசுகளை காட்டிலும் பா.ஜ.க. கூட்டணி அரசு மிகச் சிறப்பாக செயல்படுகிறது.
மத்திய அரசு 5 சதவீதத்துக்கு கீழ் கொரோனா குறைந்த பகுதிகளில் கோவில்களை திறக்க அனுமதி அளித்துள்ளது. அதனை பின்பற்றி தமிழக அரசு விரைவில் கோவில்களை திறக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதுவரை பொறுத்திருப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story