5 செல்போன் டவர்களின் இணைப்பு துண்டிப்பு நகராட்சி அதிகாரிகள் அதிரடி


5 செல்போன் டவர்களின் இணைப்பு துண்டிப்பு நகராட்சி அதிகாரிகள் அதிரடி
x
தினத்தந்தி 12 Oct 2021 6:13 PM GMT (Updated: 12 Oct 2021 6:13 PM GMT)

உரிமத்தொகை செலுத்தாத 5 செல்போன் டவர்களின் இணைப்புகளை நகராட்சி அதிகாரிகள் அதிரடியாக துண்டித்தனர்.

புதுச்சேரி
உரிமத்தொகை செலுத்தாத 5 செல்போன் டவர்களின் இணைப்புகளை நகராட்சி அதிகாரிகள் அதிரடியாக துண்டித்தனர்.

இணைப்பு துண்டிப்பு

புதுவை நகராட்சி பகுதியில் உள்ள கட்டிடங்களில் செல்போன் டவர்களை பல்வேறு நிறுவனங்கள் நிறுவியுள்ளன. அவர்கள் புதுவை நகராட்சிக்கு செலுத்த வேண்டிய உரிமத்தொகையை செலுத்த பலமுறை வேண்டுகோள் விடப்பட்டது. மேலும் கேட்பு அறிக்கை அனுப்பியும் அவர்கள் இதுவரை உரிமத்தொகையை செலுத்தவில்லை.
இதைத்தொடர்ந்து நகராட்சி ஆணையர் சிவக்குமார் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் முத்தியால்பேட்டை, நெல்லித்தோப்பு, உருளையன்பேட்டை, முதலியார்பேட்டை, முருங்கப்பாக்கம் ஆகிய பகுதியில் வீட்டு மாடிகளில் உள்ள 5 செல்போன் டவர்களின் இணைப்புகளை துண்டித்து சீல் வைத்தனர். மேலும் தலா ரூ.2½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

உரிமத் தொகை

மேலும் இதுபோல் நடைபெறாமல் இருக்கவும், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் இருக்கவும், புதுச்சேரி நகராட்சிக்கு செலுத்த வேண்டிய உரிமத்தொகையை உடனடியாக செலுத்த செல்போன் டவர் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஆணையர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

Next Story