கரூர் டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை; ரூ.62 ஆயிரம் பறிமுதல்


கரூர் டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை; ரூ.62 ஆயிரம் பறிமுதல்
x
தினத்தந்தி 12 Oct 2021 7:31 PM GMT (Updated: 12 Oct 2021 7:31 PM GMT)

கரூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை செய்தனர். இதில் கணக்கில் வராத ரூ.62 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

கரூர், 
லஞ்ச ஒழிப்புத்துறை
கரூர் அருகே தொழிற்பேட்டையில் உள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் நேற்று மாலை 5 மணியளவில் கரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு நடராஜன் தலைமையில், இன்ஸ்பெக்டர் சுவாமிநாதன் உள்ளிட்ட 7 பேர் அடங்கிய குழுவினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அலுவலகத்தில் இருந்த டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட அலுவலர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அலுவலகத்தில் உள்ள பகுதிகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
ரூ.62 ஆயிரம் பறிமுதல்
அப்போது டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ரவிச்சந்திரனிடமிருந்து ரூ.12 ஆயிரமும், டிரைவர் சபரிநாதனிடமிருந்து ரூ.25 ஆயிரமும், மேற்பார்வையாளர் ராமலிங்கத்திடம் ரூ.25 ஆயிரம் என மொத்தம் ரூ.62 ஆயிரம் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 
இந்த சம்பவம் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் கரூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story