ரூ. 36 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 14 Oct 2021 5:37 AM GMT (Updated: 2021-10-14T11:07:03+05:30)

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.408 உயர்ந்து ரூ.36,040க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை, 

தங்கம் விலையானது வாரத்தின் முதல் நாளான திங்கள் முதல் விலை ஏற்ற இறக்கத்துடனே இருந்து வந்த நிலையில் இன்று அதிரடியாக விலை உயர்ந்துள்ளது.  பெண்களை பொறுத்தவரையில், தங்களது முதலீட்டை நகையில் செலுத்துவதால், தங்கம் விலையில் ஏற்படக் கூடிய மாற்றங்களில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.408 உயர்ந்து ரூ.36,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.51 உயர்ந்து ரூ.4505 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும்,சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசுகள் அதிகரித்து ரூ.66.60 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Next Story