அப்துல்கலாம் பிறந்தநாள் - மணிமண்டபத்தில் குடும்பத்தினர்கள் மலரஞ்சலி


அப்துல்கலாம் பிறந்தநாள் - மணிமண்டபத்தில் குடும்பத்தினர்கள் மலரஞ்சலி
x
தினத்தந்தி 15 Oct 2021 11:37 AM IST (Updated: 15 Oct 2021 11:37 AM IST)
t-max-icont-min-icon

அப்துல் கலாமின் பிறந்த தினத்தை முன்னிட்டு ராமேசுவரம் பேய்கரும்பில் உள்ள மணிமண்டபத்தில் அவரது சமாதி முன்பு குடும்பத்தினர் மற்றும் ஜமாத் நிர்வாகிகள் தொழுகை நடத்தினர்.

ராமேசுவரம்,

இன்று மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 90-வது பிறந்த தினமாகும். அவரது பிறந்த தினத்தை முன்னிட்டு  ராமேசுவரம் பேய்கரும்பில் அமைந்துள்ள அவரது நினைவிடம் வண்ண விளக்குகளாலும், மலர்களாலும்  அலங்கரிக்கப்பட்டுள்ளது.

அங்கு, அப்துல் கலாமின் சமாதி முன்பு குடும்பத்தினர் மற்றும் ஜமாத் நிர்வாகிகள் தொழுகை நடத்தினர். அதன் பின்னர் சமாதிக்கு மலர் அஞ்சலி செலுத்தி, இனிப்புகள் வழங்கி பிறந்த நாளை கொண்டாடினர்.

இந்த நிகழ்ச்சியில் அப்துல் கலாம் பேரன்கள் சேக்சலீம், சேக் தாவூத், அண்ணன் மகள் நசீமாபேகம் மற்றும் குடும்பத்தினர், நடிகர் தாமு உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
1 More update

Next Story