வெள்ளப்பெருக்கால் கோவில் அடிவாரத்தில் சிக்கி கொண்ட பக்தர்கள்: கயிறு கட்டி மீட்பு


வெள்ளப்பெருக்கால் கோவில் அடிவாரத்தில் சிக்கி கொண்ட பக்தர்கள்: கயிறு கட்டி மீட்பு
x
தினத்தந்தி 16 Oct 2021 10:00 AM GMT (Updated: 2021-10-16T15:55:47+05:30)

கனமழையால் திருக்குறுங்குடி நம்பி கோவில் அடிவாரத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அங்குள்ள தரைப்பாலம் மூழ்கியது.

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக அங்கு வெள்ளப்பெருக்கு  ஏற்பட்டு உள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் திருக்குறுங்குடி நம்பி கோவில் அடிவாரத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அங்குள்ள தரைப்பாலம் மூழ்கியது.  இதனால்  திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு சென்று திரும்பிய நூற்றுக்கணக்கான மக்கள் அவதிப்பட்டனர். 

இது குறித்து மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைக்கும் படையினர் - போலீசார்  கயிற்றை கட்டி பக்தர்களை பத்திரமாக மீட்டனர். பத்திரமாக மீட்ட தீயணைப்பு படையினர் மற்றும் போலீசாருக்கு பக்தர்கள் நன்றி தெரிவித்தனர்.

Next Story