ஓராயிரம் சசிகலா வந்தாலும் அதிமுகவை அசைத்துப் பார்க்க முடியாது - சி.வி.சண்முகம்


ஓராயிரம் சசிகலா வந்தாலும் அதிமுகவை அசைத்துப் பார்க்க முடியாது -  சி.வி.சண்முகம்
x
தினத்தந்தி 17 Oct 2021 11:17 AM GMT (Updated: 2021-10-17T16:47:01+05:30)

ஓராயிரம் சசிகலா வந்தாலும் அதிமுகவை அசைத்துப் பார்க்க முடியாது என முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கூறி உள்ளார்.

விழுப்புரம்,

அதிமுகவின் பொன் விழாவை முன்னிட்டு விழுப்புரத்தில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். சிலைக்கு, முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர்,  'பண்ருட்டி ராமசந்திரன், நெடுஞ்செழியன், உள்ளிட்ட பெரிய தலைவர்களை பார்த்த இயக்கம் அதிமுக, அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று இடம் தெரியாமல் போயிட்டார்கள், ஆகவே மீண்டும் சொல்கிறேன். 

நிஜமாக இருந்தவர்களாலேயே ஒன்றும் செய்ய முடியவில்லை. சசிகலா நீங்கள் நிழல். உங்களால் அ.தி.மு.க. வை ஒன்றும் செய்ய முடியாது என்றார்.

Next Story